எதிர்கால வாழ்க்கை
உங்களுடைய உயர்நிலை கல்வி குறிப்பாக 1௦ ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மிக முக்கியமான காலமாகும், உங்கள் எதிர்காலம் குறித்து அதாவது படிப்பு, வேலை பற்றி சிந்திக்க வேண்டிய காலம் இது. சிலரது வீடுகளில் உங்கள் திருமணத்தை கூட சிந்திக்க துவங்குவார்கள். இந்த பருவத்தை அனுபவிங்கள் ஆனால் படிப்பில் கவனம் செலுந்துங்கள், உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள், விளையாடுங்கள், பாடபுத்தகங்கள் தவிர வேறு புத்தகங்களையும் படிய்ங்கள் இந்த பருவத்தில் எதிர் பால் இனத்தவருடன் அதாவது இளைஞர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை அவர்களுடன் நண்பர்களாக பழகுங்கள். திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காதல் யாதர்த்த வாழ்க்கைக்கு ஒத்து வராது, அதற்க்கான வயதும், அனுபவங்களும் உங்களுக்கு இருக்காது. இனக்கவர்ச்சி, காதல், நட்பு ஆகியவ்ற்றை புரிந்து கொள்ள முயலுங்கள்.
இந்த நேரத்தில் உங்கள் மனதில் வைத்து கொள்ள வேண்டியவை:
1.நேரம் எடுத்து எதிகாலத்தில் என்ன செய்ய விரும்புகிறிர்கள் என சிந்தியுங்கள், அதைப்பற்றி கற்பனை செய்யுங்கள், கனவு காணுங்கள். உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என தெரிந்து கொள்ளுங்கள்.
2.படிப்பை ஒரு சவாலாக எடுத்து கொள்ளுங்கள், எவ்வளவு மதிப்பு எடுக்க வேண்டும் தீர்மானித்து அதற்க்காக உழையுங்கள். அதற்க்காக ஒரேடியாக படிப்பிலையே முழ்கி விடாதிர்கள், உங்களுக்கு பிடித்தவற்றை செய்வதை விட்டு விடாதிர்கள்.
3.தேர்வுகளில் வெற்றி அல்லது தோல்வி நம் வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. வெற்றி நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், ஆனால் தோல்வி நமக்கு நல்ல படிப்பினையை கொடுக்கும், சில நேரங்களில் நமக்கு புதிய பாதையை திறக்கும்.
4.சிறு சிறு புதிய வேலை செய்து பாருங்கள், உங்கள் பகுதியில் சில சமுக பணிகளில் ஈடுபடுங்கள். அதாவது புதிய அனுபவங்களை பெறுங்கள்.
5. மேற்படிப்பு எவ்வளவு படிக்க முடியுமோ அந்த அளவுக்கு படிக்கமுயற்சியுங்கள். பட்ட படிப்ப்பு முடித்தால் உங்களுக்கு நல்ல வேலை கிடைப்போதொடு அல்லாமல் உங்கள் திருமணத்தை 21 வயது வரை தள்ளி போடவும் அது உதவும்.
6.நிறைய பேரை சந்தித்து அவர்களுடன் எதிகால வாழ்கை, கல்லுரி படிப்பு ஆகியவற்றை பற்றி பேசி தெரிந்து கொள்ளுங்கள்.
7.நாம் ஒவொருவரும் நம்முடைய வழக்கை பாதையை பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஆனால் அதைப்பற்றி தெளிவு இல்லை என்றால் கவலைபடாதீர்கள், கல்லுரி படிப்பின் பொது தெளிவு பிறக்கலாம்.
8.மனிதர்கள் மாறுவார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். எதிர்கால திட்டம் இருப்பது நல்லது ஆனால் அவை மாறலாம், ஆகவே திறந்த மனதுடன் இருங்கள், புதிய சுவாரஸ்யமான வாய்ப்புகளை தவற விடாதிர்கள்.
9.உங்களுடைய கனவுகளையும், லட்சியங்களையும் மற்றவர்களுக்காக மாற்றி கொள்ளாதிர்கள்
10.எப்போதும் உங்களுடைய திட்டங்களை மாற்றி கொள்வதற்கு தயாராய் இருங்கள்.
11.எப்பொழுதும் கற்று கொள்வதை நிறுத்தாதிர்கள், புதிய விசயங்களை கற்று கொண்டு வளருங்கள்.
என்ன படிக்கப் போகிறீர்கள்?
என்ன படிக்கப் போகிறீர்கள்? இந்த கேள்விக்கு பெரும்பான்மையனவர்கள் ஒரே மாதிரியான பதிலைத்தான் கூறுகிறார்கள் ‘டாக்டர்’ ‘இன்ஜினியர்’ சமிப காலமாக 'B.Com' இதைத் தாண்டி போவதில்லை. இதற்கு முக்கிய காரணம் ‘ஆட்டு மந்தை மனப்பான்மை’ முதல் ஆடு செல்லும் வழியிலேயே மற்ற ஆடுகள் பின் செல்லும். சமுதாயத்தில் மற்றவர்கள் செய்வதையே நாமும் செய்வது. எதிர் கால படிப்பை தேர்ந்தேடுக்க முதலில் உங்களுக்கு என்ன செய்ய பிடிக்கும், உங்கள் திறமைகள் என்ன என்பதை கண்டறியுங்கள், நீங்கள் படிக்க விரும்பும் துறையில் உள்ளவர்களை சந்தித்து பேசுங்கள், அருகில் உள்ள கல்லூரியில், பல்கலை கழகங்களில், பாலிடெக்னில் உள்ள புதிய பட்ட/டிப்ளோமா படிப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வரும் 5-6 ஆண்டுகளில் மெட்டாவெர்ஸ் (Metaverse), பேட்டரி, ஹைட்ரஜனில் ஒடும் வண்டிகள், ட்ரோன்கள் (ஆளில்லா வானூர்தி) போன்ற தொழில் நுட்பங்கள் நம் வாழ்வை பாதிக்கப் போகின்றன, இவை தொடர்புடைய படிப்புகளைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிக்கும் மேலாய் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு எதிர்கால படிப்பை தேர்ந்தெடுங்கள். பெரும்பாலான சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்லூரிகள் (IIT-Indian Institute of Technology, IIM-Indian Institute of Management, NID-National Institute of Design, NIFT-National Institute of Technology, Central universities etc) தங்களது மாணவர்கள் சேர்ப்புக்கான நுழைவு தேரிவுகளை டிசம்பர் மாதத்திலேயே முடித்து விடுவார்கள் ஆகவே அது பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். 10வது முடித்தவுடன் தொழில் நுட்ப கல்லூரிகளில் (Polytechnic) சேர்ந்து படிப்பது உங்களின் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும். வேலை கிடைப்பதும் சுலபம்.
சில வித்தியாசமான படிப்புகள்: Communication Design, Fashion design, Product design, food technology, Nutrition, cooking, hotel management, baking, film production, editing, photography, fine arts, singing, dance, Computer software coding, digital technologies like meta verse, VR-Virtual Reality, Printing technology, leather technology, different foreign languages, Journalism, Visual communication.
மேலும் தெரிந்து கொள்ள:
Tamil Nadu Government 10std Career Guidance [Click Here]
Tamil Nadu Government 12std Career Guidance [Click Here]
Youtube Video: Best courses after 12th standard in Tamil | Career Guidance after 12th science
Youtube Video: Best courses after 12th Tamil | Career options after 12th science
உங்களுடைய எதிர்கால வாழ்கை திட்டமிடல் அல்லது கல்லூரியில் சேர்வதற்கான உதவி தேவைப்பட்டால் எங்களை அணுகவும்
சினேகிதி மேலும் விபரங்கள்:
சினேகிதி ஆண்டறிக்கை:
சினேகிதி செய்தி மடல் மற்றும் விபரங்களுக்கு உங்கள் மின் அஞ்சல் அல்லது WhatsApp எண்ணை பதிவு செய்யவும் (இதை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளிக்கிறோம்)