சினேகிதி

பெண் என்பவள் யார்? அவள் எப்படியிருக்கிறாள்? அவள் உடல் சார்ந்த மொழி என்ன? வளர் இளம் பருவம் ஏன் குழப்பங்களை ஏற்படுத்துகிறது? இப்படிப்பட்ட பல கேள்விகள் நம்முன் யோசிக்க நேரமின்றி எழுகின்றன இவற்றிற்கான விடையை நட்புடன் அன்புடன் நம் தோழி அல்லது சினேகிதி யாராவது கூறினால் நலமாக இருக்கும் என்ற எண்ணம் மனதில் நிழலாடுவதை உணர முடிகிறது. இந்த கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியே


இந்த சினேகிதி தளம்

இங்கே நம்முடைய எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் கேட்க தயங்கிய கேள்விகளையும் கேட்கலாம் சொல்ல தயங்கிய பதில்களையும் சொல்லலாம்.
இது நம்மை பற்றி தெரிந்துகொள்ளும் இடம்

சினேகிதி ஓர் அறிமுகம்

சினேகிதி என்ற அமைப்பு வளர் இளம் பெண்களுக்காக பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தினால் (Centre for Women's Development and Research-CWDR) 2003ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.


சினேகிதியின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள்
  • வளர் இளம் பெண்களுக்கான பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகளை அறிய மற்றும் அடைய செயல்படுவது
  • வாழ்க்கைக் கல்வியைப் பற்றியும் உடல் உறுப்புகளைப் பற்றியும் பயிற்சி அளிப்பது, பாலினம் மற்றும் பாலியல் பற்றி எடுத்துரைப்பது.
  • பாலியல் சமத்துவ கல்வி அளிப்பது.
  • வளர் இளம் பெண்களை ஒருங்கிணைத்து பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகள் (Sexual and Reproductive health Rights-SRHR) அடைவதற்கான சமுக வக்காலத்து செயல்களில் ஈடுபடுவது.
"

பாலியல் இனப்பெருக்க நலன் மற்றும் உரிமைகள் ஒரு மனித உரிமை அதை நனவாக்க ஒன்றுபடுவோம்

Sexual and Reproductive health Rights-SRHR is Human Right Let's together make it a Reality

"

எதிர்கால வாழ்க்கை

உங்களுடைய உயர்நிலை கல்வி குறிப்பாக 1௦ ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மிக முக்கியமான காலமாகும், உங்கள் எதிர்காலம் குறித்து அதாவது படிப்பு, வேலை பற்றி சிந்திக்க வேண்டிய காலம் இது. சிலரது வீடுகளில் உங்கள் திருமணத்தை கூட சிந்திக்க துவங்குவார்கள். இந்த பருவத்தை அனுபவிங்கள் ஆனால் படிப்பில் கவனம் செலுந்துங்கள், உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள், விளையாடுங்கள், பாடபுத்தகங்கள் தவிர வேறு புத்தகங்களையும் படிய்ங்கள் இந்த பருவத்தில் எதிர் பால் இனத்தவருடன் அதாவது இளைஞர்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை அவர்களுடன் நண்பர்களாக பழகுங்கள். திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காதல் யாதர்த்த வாழ்க்கைக்கு ஒத்து வராது, அதற்க்கான வயதும், அனுபவங்களும் உங்களுக்கு இருக்காது. இனக்கவர்ச்சி, காதல், நட்பு ஆகியவ்ற்றை புரிந்து கொள்ள முயலுங்கள். . . . . .

சினேகிதி மேலும் விபரங்கள்:

சினேகிதி ஆண்டறிக்கை:


சினேகிதி செய்தி மடல் மற்றும் விபரங்களுக்கு உங்கள் மின் அஞ்சல் அல்லது WhatsApp எண்ணை பதிவு செய்யவும் (இதை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளிக்கிறோம்)

சினெகிதியிடம் தொடர்பு கொள்ள :